11.77 லட்சம் பேருக்கு காய்ச்சல் சிகிச்சை | சிவகங்கை செய்திகள் | Dinamalar
11.77 லட்சம் பேருக்கு காய்ச்சல் சிகிச்சை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:54

சிவகங்கை : கொரோனா பரவாமல் தடுக்கும் நோக்கில், 27,219 முகாம்களில் 11.77 லட்சம் பேர்களுக்கு காய்ச்சல் சிகிச்சை அளித்துள்ளோம்,'' என சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்தார்.



அவர் கூறியதாவது, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால், சிவகங்கையில் 521, அமராவதிபுதுாரில் 72, கீழக்கண்டனி தனியார் இன்ஜி., கல்லுாரி, திருப்புத்துார் சுவிடீஸ் மருத்துவமனையில் தலா 100 படுக்கைகள் என 793 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தொற்று கண்டறிந்த 3 மணி நேரத்திற்குள் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். துணை இயக்குனர் நிலையில் அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்டத்தில் 27 ஆயிரத்து 219 காய்ச்சல் முகாம் நடத்தி, 11.77 லட்சம் பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். இது வரை 45 ஆயிரத்து 943 பேர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X