பட்டாசு ஆலை காசோலை 'பவுன்ஸ்' | விருதுநகர் செய்திகள் | Dinamalar
பட்டாசு ஆலை காசோலை 'பவுன்ஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
06:00

விருதுநகர், : சாத்துார் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை நிர்வாகம் வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தது, சிலருக்கு அரசு இழப்பீடும் கிடைக்கவில்லை என உறவினர்கள், கலெக்டர் கண்ணனிடம் முறையிட்டனர்.



விபத்தில் பலியானவர்கள் உறவினர்கள் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மகாலட்சுமியுடன் இணைந்து கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனு: பிப். 12ல் நடந்த விபத்தில் 27 பேர் பலியாகினர். பட்டாசு ஆலை நிர்வாகம் வழங்கிய தலா ரூ.5 லட்சம் காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. மாநில அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிதியும் 17 பேருக்குதான் கிடைத்துள்ளது. மீதமுள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசு அறிவித்த ரூ.2 லட்சமும் கிடைக்கவில்லை, என குறிப்பிட்டிருந்தனர்.மகாலட்சுமி கூறியதாவது: தேர்தல் விதிமுறைகள் முடிந்தவுடன் மாநில அரசின் இழப்பீடு, பவுன்ஸ் காசோலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்துள்ளார், என்றார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X