மறியலில் ஈடுபட முயற்சி; பேச்சுவார்த்தையால் வாபஸ் | கடலூர் செய்திகள் | Dinamalar
மறியலில் ஈடுபட முயற்சி; பேச்சுவார்த்தையால் வாபஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
07:18

விருத்தாசலம் : விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற மா.கம்யூ., வினர் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.



விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள சுற்றுச்சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையத்திற்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நேற்று, மா.கம்யூ., வட்ட செயலாளர் அசோகன் தலைமையில், மறியலில் ஈடுபட முயன்றனர்.தகவலறிந்து வந்த நகராட்சி கமிஷனர் அசோக்குமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



அப்போது பஸ் நிலையத்தை பார்வையிட்டு, சுற்றுச் சுவரை மாலைக்குள் சீரமைப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்றுவதாகவும் உறுதியளித்தார். அதனையேற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் உடனிருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X