கடலுார் ஓட்டு எண்ணும் மையத்தில் திடீர் மின்தடை  | கடலூர் செய்திகள் | Dinamalar
கடலுார் ஓட்டு எண்ணும் மையத்தில் திடீர் மின்தடை 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
07:20

கடலுார் : கடலுாரில் ஓட்டு எண்ணும் மையத்தில் திடீர் மின் தடையால் பரபரப்பு ஏற்பட்டது.



கடலுார் தேனாம்பட்டினம் அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்தில் கடலுார், குறிஞ்சிபாடி தொகுதியில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று இரவு 10:15 மணி அளவில் ஓட்டு எண்ணும் மையத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டது.



இதையடுத்து, மின்துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்தடை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.மின்தடை குறித்து தகவலறிந்த 20க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் அங்கு திரண்டதால், பரபரப்பு நிலவியது.



பின்னர், மின்துறை ஊழியர்கள் மின்தடையை சரிசெய்து, இரவு 10:30 மணி அளவில் மீண்டும் மின் விநியோகம் வழங்கினர். இதையடுத்து, தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X