மதுவில் பூச்சி மருந்து கலந்து கணவன் கொலை தியாகதுருகத்தில் மனைவி, கள்ளக்காதலன் கைது | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
மதுவில் பூச்சி மருந்து கலந்து கணவன் கொலை தியாகதுருகத்தில் மனைவி, கள்ளக்காதலன் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
12:06

தியாகதுருகம்:தியாகதுருகம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த வீ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 40. விவசாயி. மனைவி செல்வி, 35; 15- 13 வயதில் மகன், மகள் உள்ளனர். சுப்பிரமணி 16 ம் தேதி வீட்டில் வைத்திருந்த மதுவை குடித்தார். அப்போது உடல் நிலை பாதித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அன்று இரவே இறந்தார்.சாவில் சந்தேகம் இருப்பதாக சுப்பிரமணியன் தங்கை இந்திரா தியாக துருகம் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் ஆகியோர் விசாரணை மேற் கொண்டனர்.சந்தேகத்தின் பேரில் சுப்பிரமணியன் மனைவி செல்வியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை செல்வி ஒப்புக்கொண்டார்.அவர் அளித்த வாக்குமூலம்:எனக்கும் வீ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமுருகன், 43; என்பவருக்கும் சில ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு உள்ளது. இதை அறிந்த கணவர் என்னை பலமுறை கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. எங்களின் சந்தோஷத்திற்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக் கட்ட நானும் ஜெயமுருகனும் முடிவு செய்தோம். கடந்த 15 ம் தேதி ஜெயமுருகன் பூச்சி மருந்தை வாங்கி வந்து என்னிடம் கொடுத்தார்.அதனை கடந்த 16ம் தேதி அதிகாலையில் எனது கணவர் குடித்துவிட்டு மீதம் வைத்த மதுவில் கலந்தேன். காலையில் எழுந்து அதனை குடித்ததால் எனது கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார்.விஷம் கலந்த மதுவை குடித்த பின் அதில் மண்ணெண்ணெய் வாசம் வருவதாக மகன் அஜித்குமாரிடம் கணவர் சுப்பிரமணியன் கூறியதால் நாங்கள் மாட்டிக் கொண்டோம்.இவ்வாறு செல்வி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இதையடுத்து செல்வி மற்றும் கள்ளக்காதலன் ஜெயமுருகன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மற்றொரு சம்பவம்கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம், சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 37; திருமணமாகி மனைவியை இழந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த அமுதா, 36, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன், இருவரும் திருமணம் செய்துள்ளனர்.கோவை, மதுக்கரையில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இங்கு, துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சங்கர், 32, என்பவரும் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை சங்கர், தொழிற்சாலை உரிமையாளரை தொடர்பு கொண்டு, நாகராஜ் மண் மூடப்பட்ட நிலையில், இறந்து கிடப்பதாக கூறியுள்ளார்.மதுக்கரை போலீசார், சங்கரிடம் நடத்திய விசாரணையில், அமுதா உதவியுடன், நாகராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சங்கர் - அமுதா இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நேற்று முன்தினம், சங்கர் அறையில், இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். நள்ளிரவில் வந்த நாகராஜ், வாக்குவாதம் செய்துள்ளார்.அப்போது, நாகராஜை கீழே தள்ளிய சங்கர், சுத்தியலால் தலையில் அடித்துள்ளார். அமுதா கால்களை பிடித்துக் கொள்ள, அவரது நெஞ்சில் சுத்தியலால் பலமாக அடித்துள்ளார். பின், கழுத்தை நெரித்துள்ளனர். இதில், நாகராஜ் உயிரிழந்தார்.பின், கட்டடம் கட்ட தோண்டியிருந்த குழியில் சடலத்தை கிடத்தி, மண் போட்டு மூடியுள்ளனர். கொலை செய்த விதம் குறித்து, இருவரும் நடித்து காட்டினர். போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X