போலீசார் அடித்து ரவுடி கொலை: | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
போலீசார் அடித்து ரவுடி கொலை:
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
12:12

தஞ்சாவூர்:போலீசார் அடித்து கொலை செய்ததாக எழுந்த புகாரில், ரவுடி உடலை தோண்டி எடுத்து, மீண்டும் பிரேத பரிசோதனை செய்தனர்.



தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 30; சென்னையில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ரவுடி பட்டியலில் இருந்தார்.சிலம்பரசன் கடந்த, 9ம் தேதி, சென்னையில் இருந்து தாராசுரத்துக்கு வந்த நிலையில், கும்பகோணம் தாலுகா போலீசார், அன்றிரவு சிலம்பரசனை கைது செய்ய சென்றனர். போலீசைப் பார்த்ததும், சிலம்பரசன் தப்பியோடி, அப்பகுதியில் உள்ள குளத்தில் குதித்து மறைந்தார்.



மறுநாள், 10ம் தேதி காலை, சிலம்பரசன் உடலில் ரத்தக் காயங்களுடன் குளத்தில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனைக்கு பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சிலம்பரசன் உடல், தாராசுரம் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.இந்நிலையில், சிலம்பரசனை போலீசார் அடித்துக் கொன்றதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். 'அவரது உடலை, மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், குடும்பத்தினர் மனுதாக்கல் செய்தனர்.விசாரித்த நீதிமன்றம், மறுபரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இதன்படி நேற்று, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், சிலம்பரசன் உடலை தோண்டியெடுத்து, மறுபடியும் பரிசோதனை செய்து, மீண்டும் அதே இடத்தில் புதைத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X