சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
12:21

திண்டிவனம்:திண்டிவனம் அருகே 16 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் விமல்ராஜ், 26; இவருக்கும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் நாளை 22ம் தேதி திருமணம் நடைபெறஇருந்தது.தகவலறிந்த சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, மரக்காணம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் விஜயா, கிளியனுார் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் நேற்று சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமியை விழுப்புரம் சமூக நலத்துறையில் ஒப்படைத்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X