226 பேருக்கு கொரோனா பாதிப்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
226 பேருக்கு கொரோனா பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:45

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 226 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், 75 பேர் குணமடைந்தனர். தற்போது, ?,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட கொரோனா பாதிப்பு, 17 ஆயிரத்து, 376 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 860 ஆகவும் நேற்று உயர்ந்தது. இதுவரை, 152 பேர் பலியாகி உள்ளனர்.


ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, ?.03 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கதிரவன், நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கொரோனா தொற்று கண்டறிய பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும், ?,820 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை நான்கு லட்சத்து, 71 ஆயிரத்து, 292 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் இதுவரை, ஒரு லட்சத்து, ?,983பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக அருகில் அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X