திருமண ஆசைகாட்டி பணம் பறிப்பு; எஸ்.பி.,யிடம் வாலிபர் புகார் | ஈரோடு செய்திகள் | Dinamalar
திருமண ஆசைகாட்டி பணம் பறிப்பு; எஸ்.பி.,யிடம் வாலிபர் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:46

ஈரோடு: வாலிபர்களுக்கு திருமண ஆசை காண்பித்து, மோசடி செய்து பணம் பறிக்கும் திருமண தகவல் மையம் மீது, நடவடிக்கை கோரி, ஈரோடு எஸ்.பி.,யிடம் வாலிபர் மனு அளித்தார்.


பெருந்துறை, வடக்கு தயிர்பாளையம், குட்டை தயிர்பாளையத்தை சேர்ந்த தறி பட்டறை தொழிலாளி முருகேசன், 37; ஈரோடு எஸ்.பி., தங்கதுரையிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தாய், தந்தையுடன் வசிக்கிறேன். என் உறவினர் கதிரேசன் மனைவி கவுசி. கோவை அருகே கருமத்தம்பட்டியில், ஒரு திருமண மையம் உள்ளது. எனக்கு தெரிந்த கோவையை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளார். அவர் மற்றும் நண்பர்கள் மூலம் பேசி, திருமணம் முடிக்கலாம் என கூறினார். அதன்படி அவிநாசியில் ஒரு கோவிலில், தேவி, 36, என்ற பெண்ணை பார்த்தோம். தேவியின் சித்தி கோமதி, சவுந்திரராஜன், நாகராஜன், பாய் என நான்கு பேரை கவுசி அறிமுகப்படுத்தினார். பின் நிச்சயம் செய்து, ஜன.,?ல் திருமணம் நடந்தது. புரோக்கர் கமிஷன் ஒரு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாயை, கவுசி உள்ளிட்ட ஐவர் பெற்று கொண்டனர். திருமணத்தின்போது ஒரு பவுன் தாலி கொடி, வெள்ளி கொலுசு தேவிக்கு போட்டேன். ஒரு வாரம் என்னுடன் குடும்பம் நடத்தினார். பின் கோவையில் உள்ள சித்தி வீட்டுக்கும், அங்கிருந்து பல்லடத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கும் செல்வதாக கூறி தேவி சென்றார். சில தினங்களுக்கு பின் என் மொபைல்போன் அழைப்பையே ஏற்கவில்லை. சந்தேகமடைந்து கோவை சென்று விசாரித்தபோது, தேவிக்கு சித்தியே இல்லை. மாறாக அவர் புரோக்கர் என்பது தெரிந்தது. அப்பகுதியில் விசாரித்தபோது, இதுபோல் திருமணம் ஆகாத வாலிபர்களை ஏமாற்றி, பணம் பறிப்பதை மேற்கொண்டு வருவதாக கூறினர். தேவிக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்ததும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசில், ஏற்கனவே புகார் தந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தேவி, கவுசி, கோமதி, சவுந்திரராஜன், நாகராஜ், பாய் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணம், தங்க, வெள்ளி நகைகள் திரும்ப கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X