தமிழக - கர்நாடகா எல்லையில் வனத்தில் மருத்துவ கழிவு வீச்சு | ஈரோடு செய்திகள் | Dinamalar
தமிழக - கர்நாடகா எல்லையில் வனத்தில் மருத்துவ கழிவு வீச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:46

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே, தமிழக-கர்நாடகா மாநில எல்லையில், மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டி செல்வதால், வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள, கும்டாபுரம் கும்பாரகுண்டி இடையிலான வனப்பகுதியில், மருத்துவ கழிவு, ஊசி மற்றும் காலி மருந்து பாட்டில்களை, மூட்டை கட்டி வீசுவது சமீபமாக அதிகரித்துள்ளது. இதனால் உணவு தேடி வரும் வன விலங்குகள், அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் விறகு சேகரிக்க செல்லும், மலை கிராம மக்கள், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். இரு மாநில எல்லை என்பதால், கர்நாடகா மட்டுமின்றி தமிழக பகுதியில் இருந்தும், கழிவை வீசி செல்ல அதிக வாய்ப்புள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X