சூறாவளியுடன் மழையால் சாய்ந்த மரங்கள்: நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
சூறாவளியுடன் மழையால் சாய்ந்த மரங்கள்: நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:46

சத்தியமங்கலம்: காற்றுடன் பெய்த மழையால், மூங்கில் மரங்கள் விழுந?ததால், ஆசனூரில் போக்குவரத்து பாதித்தது. தாளவாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே, இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திம்பம், ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆசனூர்-திம்பம் நெடுஞ்சாலையில் மூங்கில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பரவலாக பல இடங்களில், சாலை முழுவதும் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில், நேற்று ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X