கீழ்பவானி வாய்க்காலில் இறுதிச்சுற்று நீர் திறப்பு | ஈரோடு செய்திகள் | Dinamalar
கீழ்பவானி வாய்க்காலில் இறுதிச்சுற்று நீர் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:46

புன்செய்புளியம்பட்டி: கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, இறுதிச்சுற்று தண்ணீர், திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில், கடந்த ஜன.,7 முதல், சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த, 7ல் நான்காம் சுற்று தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இறுதி சுற்று தண்ணீர், நேற்று காலை திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, 500 கன அடி தண்ணீர், திறக்கப்பட்டது. குடிநீருக்காக, 200 கன அடி தண்ணீர், பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு, 706 கன அடி நீர் வரத்தானது. அணை நீர்மட்டம், 90.35 அடி; நீர் இருப்பு, 21.8 டி.எம்.சி.,யாக இருந்தது. இதுவரை நான்கு சுற்றுக்களில், 9.025 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இறுதி சுற்று தண்ணீர் வரும், 30ம் தேதி வரை திறக்கப்படும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X