பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.14.68 லட்சம் காணிக்கை | ஈரோடு செய்திகள் | Dinamalar
பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.14.68 லட்சம் காணிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:47

கோபி: பாரியூர் கோவில் உண்டியலில், 14.68 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கோபி தாலுகா, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், பத்து உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திறந்தும் எண்ணும் பணி நேற்று காலை, ??:?? மணிக்கு தொடங்கி, மாலை, ?:?? மணிக்கு முடிந்தது. தனியார் கல்லூரி மாணவியர், நுகர்வோர் அமைப்பினர், இதில் ஈடுபட்டனர். தங்கம், 230 கிராம், வெள்ளி, 124 கிராம் இருந்தது. இது தவிர, பணம் மற்றும் காசுகளாக, 14.68 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது. கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மூலம், அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த, 2020 ஜனவரி மாதத்தில், குண்டம் திருவிழா நடந்தது. இதையடுத்து, 2020 பிப்.,20ல் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 19.40 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. நடப்பாண்டில் குண்டம் திருவிழாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பூசாரிகள் மற்றும் கோவில் சேவகர்கள் மட்டுமே இறங்கினர். பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வருகை குறைந்ததால், கடந்தாண்டு விழாவை ஒப்பிடுகையில், ஐந்து லட்சம் ரூபாய் குறைந்துள்ளதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X