சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு ஆறு ஆண்டு சிறை | ஈரோடு செய்திகள் | Dinamalar
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு ஆறு ஆண்டு சிறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:48

ஈரோடு: நான்கு வயது சிறுமியை, பாலியல் சில்மிஷம் செய்து மிரட்டிய வாலிபருக்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம், பவானி காலிங்கராயன் பாளையம் அண்ணா நகர் சாமியாத்தாள் வீதியை சேர்ந்த கண்ணன் மகன் சதீஷ், 22. வேலைக்கு செல்வதில்லை. தன் நண்பர் உறவினரின் நான்கு வயது சிறுமியை, 2019 நவ., 4ல் பைக்கில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று, பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து போக்சோவில் வழக்குப்பதிந்து சதீஷை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மாலதி விசாரித்து, சிறுமியை பாலியல் சில்மிஷம் செய்து மிரட்டிய சதீஷூக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என நீதிபதி பரிந்துரைத்தார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X