கணவனுடன் தகராறு; மனைவி விபரீத முடிவு | ஈரோடு செய்திகள் | Dinamalar
கணவனுடன் தகராறு; மனைவி விபரீத முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:48

மொடக்குறிச்சி: கணவருடன் ஏற்பட்ட தகராறால், மனைவி, தற்கொலை செய்து கொண்டார். மொடக்குறிச்சியை அடுத்த எம்.ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் கீர்த்தனா, 21, கூலி தொழிலாளி. இவரின் கணவர் ஜீவா, 25; கூலி தொழிலாளி. தம்பதிக்கு எட்டு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாட்டால், அடிக்கடி தகராறு ஏற்படும். சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் ஏற்பட்ட சண்டையால், கீர்த்தனா மன உளைச்சல் அடைந்தார். இதனால் வேதனையில் இருந்த அவர், கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் தனியாக இருந்தார். அப்போது தூக்கு போட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் பார்த்து மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X