மகன்கள் நரபலி புகார்; பெற்றோர் உள்பட 5 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:49

ஈரோடு: ஈரோட்டில், மகன்கள் தந்த நரபலி புகார் தொடர்பாக, பெற்றோர் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.


ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 43; ஜவுளி வியாபாரி. இவர் மனைவி ரஞ்சிதா, 36; இவர்களுக்கு, 15, ? வயதில் இரு மகன் உள்ளனர். ஆறு ஆண்டுக்கு முன் இந்துமதி, 32, என்பவரை ராமலிங்கம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்துமதியின் தோழி சசி, 39; இவர்கள் ஈரோடு, ரங்கம்பாளையம் ரயில் நகரில் வசித்தனர். இதில் ரஞ்சிதாவை, சசி திருமணம் செய்து கொண்டார். நான்கு பேரும், இரு சிறுவர்களையும், படிக்க விடாமல் செய்தனர். இரண்டாவது சிறுவனை, ஆறு வயதாகியும் பள்ளியில் சேர்க்கவில்லை. இருவரையும் வீட்டில் துணிகளை துவைக்க வைத்தும், பாத்திரம் கழுவ சொல்லியும், உடம்பில் சூடு போட்டும், மிளகாய் பொடி சாப்பாடு தந்தும், கொடுமைப்படுத்தினர். ரஞ்சிதாவின் வீட்டில் இரவில், சிவனுக்கு பூஜை செய்வதாகவும், அப்போது சசி சிவனாகவும், ரஞ்சிதா சக்தியாக இருப்பதாக, கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றி, சிவன், சக்தி வேடமிட்டு பூஜை செய்துள்ளனர். இதனால் தங்களை நரபலி கொடுத்து விடுவார்களோ என்று பயந்து, பிப்.,22ல் சிறுவர்கள் இருவரும் தப்பி, புன்செய் புளியம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து கடந்த, 12ல் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், சிறுவர்கள் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் தாலுகா போலீசார், நான்கு பேர் மீதும், 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பவளத்தம்பாளையம் பகுதியில், போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடுத்தடுத்து வந்த இரு காரை சோதனை செய்தனர். காரில் இருந்தவர்கள் ராமலிங்கம், அவரது குடும்பத்தினர் என்பது தெரிந்தது. காரில் சசி, ரஞ்சிதா, ராமலிங்கம், இந்துமதி, இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த, சேலம் மாவட்டம், இடைப்பாடி, இருப்பாளியை சேர்ந்த மாரியப்பன், 42, ஆகியோர் இருந்தனர். ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். கார்களை பறிமுதல் செய்தனர். காரில் இருந்த ஒரு சிவன் சிலையையும் கைப்பற்றினர். சிறுவர்களை நரபலி கொடுக்க முயன்றனரா? என்பது குறித்த விசாரணை தொடர்வதாக, கூடுதல் எஸ்.பி., கனகேஸ்வரி தெரிவித்தார்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X