நுழைவு பாலத்தில் தேங்கிய மழை நீர்; 5 கி.மீ., சுற்றிச்சென்ற வாகன ஓட்டிகள் | ஈரோடு செய்திகள் | Dinamalar
நுழைவு பாலத்தில் தேங்கிய மழை நீர்; 5 கி.மீ., சுற்றிச்சென்ற வாகன ஓட்டிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:49

ஈரோடு: ரயில்வே நுழைவு பாலத்தில், மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பல கி.மீ., தூரம் சுற்றி சென்றனர்.


ஈரோட்டில் ஒரு வாரமாக, இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் கரையோரம், 30க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், ஈரோட்டில் இடி மின்னலுடன் மழை கொட்டியது. இதில் வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலம், ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில், மழை நீர் குளம்போல் தேங்கியது. இதனால் வெண்டிபாளையம் நுழைவு பாலம் வழியே கரூர் பைபாஸ் ரோடு, சோலார் பகுதிக்கு செல்லும் மக்களும், வெண்டிபாளையம், மரப்பாலம் பகுதிக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். டூவீலர்களில் வந்த பலர், வந்த வழியே திரும்பி சென்றனர். நேற்று மதியம் வரை இந்நிலை நீடித்ததால், 5 கி.மீ., தூரம் சுற்றி சென்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X