மாவட்டத்தில் நேற்று 383 பேருக்கு கொரோனா | சேலம் செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் நேற்று 383 பேருக்கு கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:51

சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 383 பேருக்கு, கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 237 பேர், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி, தலா, 4, மேட்டூர் நகராட்சி, 3 பேர் என, 248 பேருக்கு தொற்று உறுதியானது.


சேலம் சுகாதார மாவட்டத்தில், ஓமலூர், 17, மகுடஞ்சாவடி, 15, சேலம் ஒன்றியம், 11, சங்ககிரி, வீரபாண்டி, தலா, 9, தாரமங்கலம், 8, மேச்சேரி, நங்கவள்ளி, தலா, 5, இடைப்பாடி, 4, காடையாம்பட்டி, 2, இளம்பிள்ளை, கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், தலா ஒருவர் என, 89 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அதேபோல், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஆத்தூர், 14, பெத்தநாயக்கன்பாளையம், பி.என்.பட்டி, தலா, 7, அயோத்தியாப்பட்டணம், 6, கெங்கவல்லி, 5, தலைவாசல், 4, வாழப்பாடி, 3 பேர் என, 46 பேருக்கு உறுதியானது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர், 383 பேர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை பாதிக்கப்பட்டோர், 36 ஆயிரத்து, 667 பேர். தற்போது சிகிச்சையில், 2,019 பேர் உள்ளனர். குணமடைந்து, 108 பேர் வீடு திரும்பி உள்ளனர். நேற்று, ஒருவர் இறக்க, அதனுடன் சேர்த்து, இதுவரை இறந்தோர், 482 பேர். பரிசோதனை, 4,143 பேருக்கு நடந்தது. மொத்தமாக, 7 லட்சத்து, 40 ஆயிரத்து, 14 பேர் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.


சிகிச்சை மையம் தொடக்கம்: ஓமலூர் வட்டாரத்தில், சில நாளாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில், ஆண்கள் விடுதி கட்டடம் இரண்டு தேர்வு செய்யப்பட்டு, 150 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார்படுத்தப்பட்டிருந்தது. அந்த மையம், நேற்று முதல், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் நாளில், 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சுங்க ஊழியர்கள் பீதி: கருப்பூர் சுங்கச்சாவடி மேலாளராக, மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் பணிபுரிகிறார். அவர், சொந்த ஊர் சென்று வீட்டு, சமீபத்தில் சேலம் வந்தார். நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சோதனை செய்ததில், கொரோனா உறுதியானது. இதனால், அலுவலக பணியாளர்கள் பீதியில் உள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X