ஆர்ப்பாட்டம் | சேலம் செய்திகள் | Dinamalar
ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:51

சங்ககிரி: சங்ககிரி, அரசு போக்குவரத்து பணிமனை முன், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச., கிளை செயலர் குமார் தலைமை வகித்தார். அதில், ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே தொடங்குதல்; ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை உடனே வழங்குதல்; வார ஓய்வு, போக்குவரத்து விடுப்பு விதிகள் மாற்றுவதை கண்டித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதேபோல், கொரோனாவை காரணம் காட்டி, தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி, முறையான விடுப்பு வழங்குவதில்லை என்பதை கண்டித்து, ஓமலூர் பணிமனை முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X