மொபட் - கார் மோதி விபத்து: பெண் பலி; 2 பேர் படுகாயம் | சேலம் செய்திகள் | Dinamalar
மொபட் - கார் மோதி விபத்து: பெண் பலி; 2 பேர் படுகாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:52

தலைவாசல்: மொபட் மீது கார் மோதிய விபத்தில், பெண் பலியானார். அவரது கணவர், மகள் படுகாயம் அடைந்தனர். தலைவாசல், புனல்வாசலை சேர்ந்த, விவசாயி ஆறுமுகம், 50. இவரது மனைவி ராஜேஸ்வரி, 45. இவர்களது மகள் ரம்யா, 23. இவர்கள் மூவரும், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், புனல்வாசலில் இருந்து, மணிவிழுந்தானுக்கு சென்றுகொண்டிருந்தனர். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சார்வாய் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது, தலைவாசலில் இருந்து, ஆத்தூர் நோக்கிச்சென்ற, மாருதி ஆல்டோ கார் மோதியது. அதில், மூவரும் படுகாயமடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி, நேற்று உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X