கத்தியை காட்டி பணம் பறித்தவர் சிக்கினார் | சேலம் செய்திகள் | Dinamalar
கத்தியை காட்டி பணம் பறித்தவர் சிக்கினார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:53

கெங்கவல்லி: விவசாயியிடம், கத்தியை காட்டி பணம் பறித்தவர், வாகன சோதனையில் சிக்கினார். கெங்கவல்லி, நடுவலூர், பள்ளக்காட்டை சேர்ந்த, விவசாயி சங்கர், 42. நேற்று முன்தினம் பள்ளக்காடு பஸ் ஸ்டாப்பில் உள்ள மளிகை கடையில், பொருட்களை வாங்கிவிட்டு, அதன் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது வந்த ஒருவர், சங்கரை மறித்து, கத்தியை காட்டி, 2,000 ரூபாயை பறித்து தப்பினார். சங்கர் புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரித்தனர். அதில், பெரம்பலூர், உச்சிகுளம் அருகே, மேல் உசேன் நகரை சேர்ந்த தமிழ்மணி, 35, என தெரிந்தது. இவர் மீது, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில், திருட்டு, வழிப்பறி என, 24 வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. நேற்று, தெடாவூரில் வாகன சோதனையின்போது, போலீசாரை பார்த்து ஓட்டம் பிடித்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, தமிழ்மணி என தெரிந்தது. இதனால், அவரை, போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X