வாலிபரை தாக்கியவர் கைது | சேலம் செய்திகள் | Dinamalar
வாலிபரை தாக்கியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:53

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அருகே ராசிக்கவுண்டணூர், வழவன்காட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ், 39; தறித்தொழிலாளி. இவரது சித்தி பழனியம்மாள், 50, அதே பகுதியில் வசிக்கிறார். இவருக்கும், அருகில் வசிக்கும் மணிகண்டன், 23, இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, மணிகண்டன், அவரது தங்கை கணவர் ரூபன், 22, ஆகியோர், பழனியம்மாள் வீட்டில் நுழைந்து, பொருட்களை அடித்து நொறுக்கினர். தட்டிக்கேட்ட வெங்கடே?ஷ தாக்கினர். தொடர்ந்து, வெங்கடேஷ் வீட்டிலும் புகுந்து, 'டிவி'யை சேதப்படுத்தினர். வெங்கடேஷ், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகுடஞ்சாவடி போலீசார், நேற்று ரூபனை கைது செய்து, மணிகண்டனை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X