'கொரோனா' தடுப்பூசி உயிரிழப்பை தடுக்கும்!: மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:54

'தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு, ஜன., 16 முதல், நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், முதலில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தாலும், அதன்பின், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், தினமும், 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் விவேக், தாமாக முன்வந்து, அவரது குழுவினருடன் தடுப்பூசி போட்டு கொண்டார். அடுத்தநாள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில், தடுப்பூசியால் தான், அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. ஆனால், 'நடிகர் விவேக் இறப்பிற்கு, தடுப்பூசி, 1 சதவீதம் கூட காரணமில்லை. மாரடைப்பு, யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:


இந்தியாவின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டு கொண்ட பின், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்று ஏற்பட்டாலும், இரண்டு, மூன்று நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவர். குறிப்பாக, 82 வயதான துரைமுருகனுக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர், தடுப்பூசி போட்டு கொண்டதால், பெரிய அளவிலான பாதிப்பின்றி நலமுடன் இருக்கிறார். மேலும், தடுப்பூசி போட்டு கொள்வதால், மாரடைப்பு ஏற்படாது. என்னிடம் வரும், 100க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள், தடுப்பூசிகள் போட்டப்பின், நலமுடன் வாழ்கின்றனர். தடுப்பூசியால் சிறு, சிறு பிரச்னைகள் வரலாம். ஆனால், உயிரிழப்பை ஏற்படுத்தாது. எனவே, அனைவரும் தவறாமல், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் அர்த்தநாரி, இதய சிகிச்சை நிபுணர், சென்னை.


இஸ்ரேல் நாட்டில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநிலையை, இந்தியாவிலும் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அதன் வீரியம் குறைவாக இருக்கும். அதன் வாயிலாக, மற்றவர்களுக்கு தொற்று பரவாது. அவர்களையும் பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், தடுப்பூசி போடாத நிலையில், ஒவ்வொரு முறையும் தொற்று கட்டுக்குள் வந்தாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால், மீண்டும் அதிகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும்.


- டாக்டர் ஆனந்தகுமார், கதிரியக்க சிகிச்சை நிபுணர் மற்றும்


ஒருங்கிணைப்பு அதிகாரி, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை. கொரோனா தொற்று மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை நான் மட்டுமின்றி, மாவட்ட கலெக்டர் கார்த்திகா, எஸ்.பி., பிரவேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான டாக்டர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் இரண்டு கட்டமாக போட்டுள்ளோம். தடுப்பூசி முதல்கட்டமாக போடும்போது, 75 சதவீதமும், இரண்டாம் கட்டமாக போடும்போது, 99 சதவீதமும் கொரோனா தொற்றும் மற்றும் உயிரிழப்பை தடுக்கும். தடுப்பூசி போட்டுக் கொள்வதால், எந்தவித பின்விளைவும் ஏற்படாது. தொற்றை தடுக்க போராடும் டாக்டர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளருக்கு, ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், பொதுமக்கள் அச்சமின்றி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள முன்வர வேண்டும்.


- டாக்டர்.கே.அமுதவல்லி, டீன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தர்மபுரி.


தடுப்பூசி போட வருபவர்களின் உடல்நலத்தை பரிசோதித்த பின்தான் தடுப்பூசி போடப்படுகிறது. அதன் பின், இரண்டு மணி நேரம் வரை, கண்காணிக்கப் படுகின்றனர். இதுவரை, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாததால், பொதுமக்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள சமூக வலைத்தளங்களில் வரும், போலி விமர்சனங்களை தவிர்த்து விட்டு அச்சமின்றி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.


- டாக்டர். ??என்.இளங்கோவன், பேராசிரியர், அரசு மருத்துவக்கல்லூரி கண் சிகிச்சை பிரிவு, தர்மபுரி.


இதுவரை, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் போடப்பட்ட, கொரோனா தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்க மக்கள் அச்சமின்றி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும்.


- டாக்டர். பி.ஏ.சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், தர்மபுரி.


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று முன்தினம் வரை, 12 ஆயிரத்து, 105 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர். எனவே, தர்மபுரி மாவட்ட மக்கள் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும், மாவட்ட, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொதுமக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டு பயன் பெறலாம். இதன் மூலம், கொரோனா பரவலை தடுப்பதுடன், தங்களது உயிரையும் பாதுகாத்து கொள்ளலாம்.


- டாக்டர் எம்.சந்திரசேகர், ஆர்.எம்.ஓ., அரசு மருத்துவக் கல்லூரி, தர்மபுரி.


கொரோனா தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம். தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்தான் மருத்துவப் பணியாளர்கள் தைரியமாக மருத்துவ சேவைகளை செய்ய முடிகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. மக்கள் வதந்திகளை நம்பி கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது தவறானது. தடுப்பூசியை தவிர, கொரோனாவை அழிக்கும் ஆயுதம் ஏதும் இல்லை. எனவே, தடுப்பூசி போட்டு, கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வோம்.


- ஆர்.தொல்காப்பியன், வட்டார மருத்துவ அலுவலர், அரூர்.


அரசு வழங்கும் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தடுப்பூசியை மக்கள் தாமாக முன்வந்து செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம். அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப் பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.


-டாக்டர் என்.கவுரிசங்கர், வட்டார மருத்துவ அலுவலர், பாப்பிரெட்டிப்பட்டி.


கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஜன., 16ல் இருந்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது. கொரோனா தொற்றில் இருந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளனர். எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.


- டாக்டர் என்.சிவக்குமார், கண்காணிப்பாளர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தர்மபுரி.


- நமது நிருபர் குழு -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X