பூதநத்தத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி | தர்மபுரி செய்திகள் | Dinamalar
பூதநத்தத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:54

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், செவிலியர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. தர்மபுரி மாாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், தீத்தொண்டு வாரத்தையொட்டி நேற்று, நிலைய அலுவலர் செல்வமணி தலைமையில், தீயணைப்பு மீட்பு குழுவினருடன், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. பூதநத்தம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், டாக்டர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், தீ விபத்து சமயத்தில் எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் தீ விபத்துக்கள் மீட்பு அழைப்புகளில் எவ்வாறு செயல்பட்டு உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றுவது என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு, மீட்பு பணியாளர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X