பைக் திருடிய வாலிபர் கைது | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
பைக் திருடிய வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
13:59

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, தேவசமுத்திரத்தை சேர்ந்தவர் பிரசாத், 37, விவசாயி; கடந்த, 19ல், காலை, 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை அருகில் தன் ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த டீக்கடையில், டீ குடித்துள்ளார். அப்போது, அவர் கண் முன்னே ஒரு வாலிபர், அவரது பைக்கை திருடி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கதினர் உதவியுடன், அந்த வாலிபரை பிடித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த வாலிபர், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, ஏலகிரி காலனி பகுதியை சேர்ந்த, இன்பரசன், 34, என தெரிந்தது. அவரை கைது செய்த கிருஷ்ணகிரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X