தடுப்பூசி கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும்; பா.ஜ., கோரிக்கை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
தடுப்பூசி கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும்; பா.ஜ., கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:07

ஓசூர்: ஓசூர் பகுதியிலுள்ள சுகாதார மையங்களில், கொரோனா தடுப்பூசிகளை இருப்பில் வைத்து, பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என, பா.ஜ., சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.


கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் கட்சியினர், நேற்று காலை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில் ?தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஓசூர் பகுதியில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள், மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில், 45 வயதுக்கு மேற்பட்டோர் தற்போது தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். வரும் மே, 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், ஓசூரில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில், போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. வளர்ந்து வரும் தொழில் நகரான ஓசூரில், போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், மக்கள் பெரிதும் வருத்தத்தில் உள்ளனர். எனவே, அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலையங்களில், தடுப்பூசிகளை போதிய அளவு இருப்பு வைத்து, பொதுமக்களுக்கு உடனுக்குடன் செலுத்தி, கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X