கொரோனா ஊரடங்கால் பயணிகளுக்கு இரவு 10 மணிக்குள் செல்ல பஸ் வசதி | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கொரோனா ஊரடங்கால் பயணிகளுக்கு இரவு 10 மணிக்குள் செல்ல பஸ் வசதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:08

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நான்கு பஸ் ஸ்டாண்டிலிருந்து இரவு, 10:00 மணிக்குள் செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு உத்தரவின்படி, இரவு, 10:00 முதல் மறுநாள் அதிகாலை, 4:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இரவு, 10:00 மணிக்குள், பிற பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, புறநகர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தர்மபுரிக்கு இரவு, 9:00 மணிக்கும், ஓசூர், பெங்களூருக்கு இரவு, 8:30 மணிக்கும், சென்னைக்கு மாலை, 3:00 மணிக்கும், திருப்பத்தூருக்கு இரவு, 9:00 மணிக்கும், சேலத்துக்கு இரவு, 7:15 மணிக்கும், பாலக்கோட்டிற்கு இரவு, 9:00 மணிக்கும், திருவண்ணாமலைக்கு இரவு, 7:15 மணிக்கும், அரூருக்கு இரவு, 8:00 மணிக்கும், வேலூருக்கு இரவு, 7:15 மணிக்கும் புறப்படும் வகையில் பஸ் வசதி உள்ளது. இதேபோல், ஓசூர் புறநகர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தர்மபுரிக்கு இரவு, 7:30 மணிக்கும், கிருஷ்ணகிரிக்கு இரவு, 8:45 மணிக்கும், சேலத்துக்கு மாலை, 6:30 மணிக்கும், பெங்களூருக்கு இரவு, 9:00 மணிக்கும், வேலூர், திருவண்ணாமலைக்கு மாலை, 6:00 மணிக்கும் புறப்படும். ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்டிலிருந்து ஓசூருக்கு இரவு, 7:30 மணிக்கும், திருவண்ணாமலைக்கு இரவு, 8:30 மணி, சேலத்துக்கு இரவு, 7:30 மணிக்கும், திருப்பத்தூருக்கு இரவு, 9:00 மணிக்கும் புறப்படும். திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தர்மபுரிக்கு செல்ல இரவு, 8:30 மணிக்கும், ஓசூர் மற்றும் பெங்களூருக்கு இரவு, 7:45 மணிக்கும் புறப்படும். எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயணம் செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X