தீவன ஆலை, கடைகள் இயங்க அனுமதி: பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு | ஈரோடு செய்திகள் | Dinamalar
தீவன ஆலை, கடைகள் இயங்க அனுமதி: பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:10

மொடக்குறிச்சி: நஞ்சை ஊத்துக்குளியில் மாட்டுத்தீவன ஆலைகள், கடைகள் செயல்பட, அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.



ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளியில், தனியார் மாட்டுத்தீவன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர் பணிபுரிகின்றனர். இதில், 101 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கடைகளும், தீவன ஆலையும் மூடப்பட்டது. இந்நிலையில் ஐந்து கடைக்காரர்களுக்கும் தொற்று உறுதியானது. இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட கடைகளை தவிர, பிற கடைகள் மற்றும் தீவன ஆலை திறக்கப்படும் என, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள், மக்கள், நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், இரு தரப்பினரிடமும் அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. தாசில்தார் சங்கர் கணேஷ், ஆர்.டி.ஓ., சைபுதீன், டி.எஸ்.பி.ராஜ் தலைமை வகித்தனர். இதில் சுமுக தீர்வு ஏற்பட்டது.


இதுகுறித்து ஆர்.டி.ஓ., கூறியதாவது: பேச்சுவார்த்தையில், மாட்டுத்தீவன ஆலைகள், கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. பத்து நாட்களுக்கு மாட்டுத்தீவன ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் வெளியே வரக்கூடாது. பத்து நாட்கள் கழித்து அவர்களுக்கு பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஆலைக்கு வரும் லாரி டிரைவர்களும், கட்டாயம் பி.சி.ஆர்., பரிசோதனை செய்த சான்று வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X