தனியார் பஸ்சுக்கு அபராதம்: அதிகாரியை முற்றுகையிட்ட பயணிகள் | கரூர் செய்திகள் | Dinamalar
தனியார் பஸ்சுக்கு அபராதம்: அதிகாரியை முற்றுகையிட்ட பயணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:10

கரூர்: கரூர் அருகே, தனியார் பஸ்சுக்கு அபராதம் விதித்ததால், நகராட்சி அதிகாரியை பயணிகள் முற்றுகையிட்டனர்.


திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து கரூருக்கு நேற்று காலை, வி.வி.டி. என்ற தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சை நாமக்கல்லை சேர்ந்த சிவசக்தி, 40, ஓட்டினார். 40க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். நேற்று காலை, 9:30 மணிக்கு கரூர் அருகே, காந்தி கிராமம் டபுள் டேங்க் ஸ்டாப்பில் பஸ் நின்றது. அப்போது, கரூர் நகராட்சி நகர்நல அலுவலர் யோகானந்த் தலைமையிலான ஊழியர்கள் தனியார் பஸ்சில் ஏறி ஆய்வு செய்தனர். பஸ்சில், 50 சதவீதத்துக்கும் மேல் பயணிகள் இருந்ததாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முக கவசம் அணியாமல் இருந்ததாலும், நகராட்சி ஊழியர்கள், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த டிரைவர் சிவசக்தி, கண்டக்டர் மற்றும் பயணிகள், நகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்களை முற்றுகையிட்டு, அரசு பஸ்களுக்கு அபராதம் விதிக்க முடியுமா என, கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். தான்தோன்றிமலை போலீசார் சென்று, பயணிகளை சமாதானப்படுத்தி அவர்களை, கரூர் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டு விட்டு, பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து, பஸ்சில் பயணிகள் ஏறி கரூர் பஸ் ஸ்டாண்ட் சென்றனர். பிறகு, பஸ் தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X