மா மரங்களில் புதிய வகை பூச்சி தாக்குதல்: விவசாயிகள் அதிர்ச்சி; அதிகாரிகள் ஆய்வு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
மா மரங்களில் புதிய வகை பூச்சி தாக்குதல்: விவசாயிகள் அதிர்ச்சி; அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:11

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மா மாரங்களில், புதிய வகை பூச்சி தாக்குதலால், குருத்து இலை மற்றும் மாங்காய்களை துளையிட்டு பூச்சி தின்று விடுவதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா விவசாயம் நடந்து வருகிறது. இந்த வருடம் அதிக காற்று மற்றும் பருவம் தவறிய மழையால், பூ பிடிக்காமல் முப்பது சதவீத விளைச்சல் மட்டுமே உள்ளதால், மா விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டக்கல்லில், தற்போது புதிய வகை பூச்சி தாக்குதலால், மாங்காய்கள் அதிகளவு சேதமடைந்து வருவதால், மா விவசாயிகள் மேலும் வேதனையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி சிவகுரு கூறுகையில், ''இலைகளில் தங்கும் பூச்சிகள் சிறு, சிறு புழுக்களாக மாறி, குருத்து இலைகளையும், பின், மாங்காய்களில் புகுந்து அனைத்தையும் தின்று விடுகின்றன,'' என்றார். கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் உமாராணியிடம் கேட்டபோது, ''தொடர்ச்சியாக மருந்து தெளித்த மாமரங்களில் மட்டுமே இப்பூச்சி தாக்குதல் உள்ளது. தொடர்ச்சியாகவும், தேவையில்லாத மருந்தும் தெளித்ததால் அதிக நோய் எதிர்ப்புசக்தி கொண்டு காவிடி புழு, சிவப்பு புழு துளைபான், பச்சை புழு மற்றும் பல ஈக்கள் பெருகியுள்ளன. இவை, பெரும்பாலும் பெங்களூரா, அல்போன்சா மாங்காய்களையே தாக்கியுள்ளன. மானாவாரி நிலங்களில் மருந்து தெளிக்காத மரங்களில் பூச்சி தாக்குதல் இல்லை. தொடர் மருந்து தெளிப்பே, இப்பூச்சி உருவாக காரணம். விளக்கு பொறி மற்றும் பல்வேறு மருந்துகளை கொடுத்து, படிப்படியாக மட்டுமே, இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X