கே.ஆர்.பி., அணை சிறுவர் பூங்கா மூடல் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கே.ஆர்.பி., அணை சிறுவர் பூங்கா மூடல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:11

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணை மற்றும் சிறுவர் பூங்கா நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதுகாப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றிலிருந்து இரவு, 10:00 மணி முதல் காலை, 4:00 மணி வரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத்தலங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம், கிருஷ்ணகிரி காந்திசாலையில் உள்ள அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும், தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் நேற்று, கே.ஆர்.பி., அணைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் படகுகள் அனைத்தும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டன. வீட்டிலிருந்து வெளியே வரும் மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X