மாநில டேபிள் டென்னிஸ் போட்டி: வெண்கலம் வென்ற ஓசூர் வீரர், வீராங்கனைகள் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
மாநில டேபிள் டென்னிஸ் போட்டி: வெண்கலம் வென்ற ஓசூர் வீரர், வீராங்கனைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:12

ஓசூர்: கோவை மாவட்டத்தில் நடந்த, மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், ஓசூர் வீரர், வீராங்கனைகள் வெண்கல பதக்கம் வென்றனர்.


கோவை மாவட்டத்தில், மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சென்னை உட்பட, 18 மாவட்ட அணிகள் பங்கேற்றன. போட்டியில், 12, 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்களுக்கு, தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்ட டேபிள் டென்னிஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் சார்பில், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், மாணவியர் கனிகா, தாரணி, ஜெயஸ்ரீ, யாழினிஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். அதேபோல், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், ஹாசினி, நிவேதாஸ்ரீ, மதுமிதா ஆகியோரும், ஆண்கள் பிரிவில், கோகுலகிருஷ்ணன், அருண் கார்த்திக், ஷேசாங், ஷாம் ஆகியோரும் வெண்கல பதக்கம் வென்றனர். மேலும், 12 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில், மாணவி கனிகா வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கிருஷ்ணகிரி மாவட்ட டேபிள் டென்னிஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் தலைவர் ராமசாமி, செயலாளர் ராஜ், பயிற்சியாளர்கள் ராஜ் அரவிந்த் அழகர், கபீர் ஆகியோர் பாராட்டினர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X