ஓசூரில் 200 பவுன் நகை கொள்ளை: அடையாளம் காணப்பட்டுள்ள குற்றவாளிகள் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
ஓசூரில் 200 பவுன் நகை கொள்ளை: அடையாளம் காணப்பட்டுள்ள குற்றவாளிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:12

ஓசூர்: ஓசூரில், 200 பவுன் நகை கொள்ளை சம்பவத்தில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதால், விரைவில் பிடிபடுவார்கள் என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.எம்.நகரை சேர்ந்த மாதையன், 52, சவுதி அரேபியாவிலுள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில், பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார். கொரோனாவால் கடந்த ஓராண்டாக குடும்பத்தினருடன் ஓசூரில் வசித்து வந்த அவர், கடந்த, 16ல், தன் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அச்சமயத்தில், அவரது வீட்டில் புகுந்த மர்மகும்பல், 200 பவுன் தங்க நகை மற்றும் இரண்டு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது. இக்கொள்ளை கும்பல் வந்து சென்றதற்கான, 'சிசிடிவி' கேமரா காட்சிகள், தனிப்படை போலீசார் வசம் கிடைத்துள்ளது. அதில் தொப்பி அணிந்த ஒருவரும், மற்றொருவரும் கையில் இரும்பு ஆயுதங்களுடன் மாதையன் வீட்டிற்கு செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கர்நாடகா மாநிலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், சேலம் டி.ஐ.ஜி., பிரதீப்குமார், கொள்ளை நடந்த வீட்டிற்கு நேற்று நேரில் சென்று, மாதையன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என, மாவட்ட எஸ்.பி., பண்டிகங்காதரை கேட்டறிந்தார். கொள்ளை கும்பல் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X