ரூ.6.60 லட்சம் மதிப்பிலான குட்கா சேலத்திற்கு கடத்தல்; இருவர் கைது | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
ரூ.6.60 லட்சம் மதிப்பிலான குட்கா சேலத்திற்கு கடத்தல்; இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:13

ஓசூர்: ராயக்கோட்டை வழியாக, சேலம் மாவட்டத்திற்கு கடத்த முயன்ற, ஆறு லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்கள் இருவரை கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு ராயக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 33 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்துள்ளது. இதனால் லாரி டிரைவர்களான சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த உப்பாரப்பட்டியை சேர்ந்த பார்த்திபன், 32, பன்னப்பட்டி ஜங்ஷன் பகுதியை சேர்ந்த சசிக்குமார், 35, ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, சேலம் மாவட்டத்திற்கு குட்காவை கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து, ஆறு லட்சத்து, 62 ஆயிரத்து, 400 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்கள் பார்த்திபன், சசிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X