கிராம்பு வரத்து சரிவு; விலை உயர்ந்தது | சேலம் செய்திகள் | Dinamalar
கிராம்பு வரத்து சரிவு; விலை உயர்ந்தது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:15

சேலம்: கிராம்பு வரத்து சரிவால், அதன் விலை, கிலோவுக்கு, 40 ரூபாய் உயர்ந்தது. கேரளா, அதை ஒட்டிய தமிழகத்தின் தேனி, திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம், நீலகிரி, ஊட்டி உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் இருந்து, தமிழக மார்க்கெட்டுகளுக்கு, கிராம்பு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், மலைப்பிரதேசங்களில், கிராம்பு அறுவடை முடிவுக்கு வந்துள்ளது. இதனால், மார்க்கெட்டுகளுக்கு அதன் வரத்து சரிந்துள்ளது. கடந்த மாதம் வரை, வாரம், 100 லாரிகளில் விற்பனைக்கு வந்த கிராம்பு, தற்போது, 40 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால், அதன் விலை, நேற்று கிலோவுக்கு, 40 ரூபாய் உயர்ந்தது. அதன்படி, முதல் ரகம் கிலோ, 760க்கு விற்றது, 800 ரூபாய், இரண்டாம் ரகம், 680க்கு விற்றது, 720 ரூபாய், மூன்றாம் ரகம், 630க்கு விற்றது, 670 ரூபாயாக உயர்ந்தது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X