வார விடுப்பு ஞாயிறுக்கு மாற்றம்: டிரைவர், கண்டக்டர்கள் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:16

சேலம்: போக்குவரத்து தொழிலாளர்களின் வார விடுப்பை, ஊரடங்கு நாளான ஞாயிறுக்கு மாற்றி, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், டிரைவர், கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


அரசு போக்குவரத்துக்கழகத்தின், 22 ஆயிரத்து, 125 பஸ்களின் இயக்கம், பராமரிப்பு பணியில், 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, சுழற்சி முறையில், வார விடுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று, அனைத்து அரசு பஸ்களின் இயக்கமும் முடங்கும். வழக்கமாக, வார விடுமுறையில், தொழிலாளர்கள் பணிக்கு வந்தால், சம்பளம் வழங்க வேண்டும். மாற்றாக, அதே நாளில் பணி வழங்கப்படாமல், மாற்று நாளில், அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும். இதனால், தமிழகத்தின், 325 பணிமனைகளில் பணிபுரியும், டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களின் வார விடுப்பை, ஞாயிறுக்கு மாற்றி, கிளை மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது, டிரைவர், கண்டக்டர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பாதிக்கப்பட்டாலும் சிறப்பு விடுப்பு இல்லை: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பஸ்கள் இயக்கத்தின்போது, முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைப்பிடிக்காதவர்கள், கொரோனா தொற்றில் சிக்கினால், சிகிச்சை பெற, சிறப்பு விடுப்பு வழங்க இயலாது என, மேலாண் இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதை மேற்கொள்காட்டி, பிற கோட்டங்களிலும் கொரோனாவுக்கு சிறப்பு விடுமுறை இல்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளது, தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X