சேலத்தில் 12:16 மணிக்கு பூஜ்ய நிழல்; அறிவியல் இயக்கம் செய்முறை விளக்கம் | சேலம் செய்திகள் | Dinamalar
சேலத்தில் 12:16 மணிக்கு பூஜ்ய நிழல்; அறிவியல் இயக்கம் செய்முறை விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:17

சேலம்: சேலத்தில், 12:16 மணிக்கு நடந்த பூஜ்ய நிழலை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், செய்முறை விளக்கம் மூலம், நிரூபணம் செய்யப்பட்டது.


வானத்தில், நேர் செங்குத்தான உச்சியில் சூரியன் வரும்போது, அதன் நிழல் முழுதுமாக மறைகிறது. ஆண்டுக்கு இருமுறை நடக்கும், இந்த அரிய நிகழ்வு, குறிப்பிட்ட பகுதியில் தென்படும். அட்சரேகை, 23.5, மைனஸ், 23.5 அட்சரேகை கொண்ட பகுதியில், அரிய நிகழ்வு அரங்கேறுகிறது. ஒரே இடத்தில் அட்சரேகையும், சூரியனின் சாய்வு கோணம் சமமாக இருக்கும்போது, நிழல் பூஜ்யமாகிறது. அதன்படி, சேலத்தில், நேற்று மதியம், 12:16 மணிக்கு, நிழல் முற்றிலும் மறைந்தது. வானவியலில் ஏற்படும், இந்த அரிய நிகழ்வை தெரிந்து கொள்ள, மஜ்ராகொல்லப்பட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், மாநில வானவியற்கருத்தாளர் ஜெயமுருகன், அறிவியல் பொருட்களை கொண்டு, செயல்முறை விளக்கம் மூலம், பூஜ்ய நிழலை காட்டினார். அதை, ஆர்வத்துடன் பலரும் பார்த்தனர். நிழல் ஏன் மறைகிறது, அதனால் வானவியலில் ஏற்படும் மாற்றம் குறித்து, மாணவ, மாணவியர், மக்களுக்கு விளக்கம் அளித்தார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X