நீர்பிடிப்பு பகுதியில் மழை: மேட்டூர் நீர்வரத்து அதிகரிப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
நீர்பிடிப்பு பகுதியில் மழை: மேட்டூர் நீர்வரத்து அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:18

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த கோடைமழையால், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த வறட்சியால், மேட்டூர் அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 216 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, குடிநீருக்கு வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றியதால், நேற்று முன்தினம், அணை நீர்மட்டம், 97.54 அடியாக சரிந்தது. நேற்று, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த கோடை மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 1,499 கனஅடியாக அதிகரித்தது. அதற்கேற்ப, அணை நீர்மட்டம், 97.55 அடியாக சற்று உயர்ந்தது.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X