பராமரிப்பு பணியில் ரூ.6.50 லட்சம் மோசடி: செயல் அலுவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு | சேலம் செய்திகள் | Dinamalar
பராமரிப்பு பணியில் ரூ.6.50 லட்சம் மோசடி: செயல் அலுவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:18

சேலம்: பேரூராட்சி பராமரிப்பு பணியில், 6.50 லட்சம் ரூபாய் மோசடி கண்டு பிடிக்கப்பட்டு, செயல் அலுவலர் உள்பட இருவர் மீது, 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், தேர்வு நிலை பேரூராட்சி செயலர் அலுவலர் கார்த்திகேயன், 52. இவர், பேரூராட்சி பராமரிப்பு பணியில், முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. சேலம், லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலி தலைமையில் போலீசார், சமீபத்தில், பேரூராட்சி ஆவணங்களை தணிக்கை செய்தனர். அப்போது, குடிநீர் குழாய்களை சீரமைத்தல், பொது செப்டிங் டேங்க் சுத்தம் செய்தல், தெருவிளக்கு உள்ளிட்ட மின் பணிகள் மேற்கொண்டதாக, உறவினர் முகவரிகளில், போலி ரசீது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், இல்லாத நிறுவனத்தை இருப்பதாக காட்டி, அதன் பெயரில் பராமரிப்பு பணி செய்ததாக, 6.50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி நடந்தது தெரியவந்தது. இதற்கு, இடைப்பாடியை சேர்ந்த சதீஷ்குமார், 30, உடந்தையாக செயல்பட்டதும் உறுதியானது. இதுதொடர்பாக, கூட்டு சதி, போலி ஆவணம் தயாரித்தல், அதை உண்மை ஆவணமாக பயன்படுத்தல், நம்பிக்கை துரோகம், மோசடி, அரசு பணம் கையாடல் உள்பட, 11 பிரிவில், கார்த்திகேயன், சதீஷ்குமார் மீது, நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் கூறுகையில், 'புலன் விசாரணையில் உறவினர்கள் பலர் சிக்குவர். ஒப்புதல் பெறாமல் பராமரிப்பு பணி நடந்துள்ளது. மோசடி தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X