கொரோனா தடை உத்தரவால் சாத்தனூர் அணைக்கு 'சீல்' | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
கொரோனா தடை உத்தரவால் சாத்தனூர் அணைக்கு 'சீல்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
14:19

திருவண்ணாமலை: கொரோனா தடை உத்தரவால், சாத்தனூர் அணைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூரில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சாத்தனூர் அணை. சுற்றுலா தலமான இங்கு, பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல், சறுக்கல், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குளித்து மகிழ நீச்சல் குளம், படகு சவாரி, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய முதலை பண்ணை போன்றவை உள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். ஆண்டுதோறும், பள்ளி, கல்லூரி மாணவர்களை சுற்றுலாவுக்கு இங்கு அழைத்து வருவர். தற்போது கொரோனா ஊரடங்கால், சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ?நேற்று, சாத்தனூர் அணை மூடி, 'சீல்' வைக்கப்பட்டது. இதனால், நேற்று சாத்தனூர் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X