கரூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா | கரூர் செய்திகள் | Dinamalar
கரூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:28

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பின், மூன்று மடங்கு தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில், 66 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்த, 41 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம், 6,395 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5,815 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 52 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 528 பேர் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X