ஜூலை 1 முதல் உத்யம் பதிவறிக்கை பெறலாம் | கரூர் செய்திகள் | Dinamalar
ஜூலை 1 முதல் உத்யம் பதிவறிக்கை பெறலாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:28

கரூர்: ஜூலை 1 முதல் உத்யம் பதிவறிக்கையினை குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைய வழியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என, கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக புதிய வகைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. இதில், குறுந்தொழில் என்பது நிறுவனத்தின் இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பு, 1 கோடி ரூபாய் மிகாமலும், ஆண்டுவிற்று முதல், (tதணூண ணிதிஞுணூ) 5 கோடி ரூபாய் மிகாமலும் உள்ள தொழில் நிறுவனங்கள். சிறுதொழில் என்பது நிறுவனத்தின் இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பு, 10 கோடி ரூபாய் மிகாமலும், ஆண்டுவிற்று முதல், 50 கோடி ரூபாய் மிகாமலும் உள்ள தொழில் நிறுவனங்கள். நடுத்தர தொழில் என்பது நிறுவனத்தின் இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பு, 50 கோடி ரூபாய் மிகாமலும், ஆண்டு விற்று முதல், 250 கோடி ரூபாய் மிகாமலும் உள்ள தொழில் நிறுவனங்கள் என்று புதிய வகைப்பாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள உத்யோக் ஆதார் பதிவறிக்கை, ஜூன் 30 உடன் விலக்கி கொள்ளப்படும். ஜூலை 1 முதல் உத்யம் பதிவறிக்கையினை குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைய வழியாக பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கரூர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X