தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் | கரூர் செய்திகள் | Dinamalar
தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:29

கரூர்: கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், சி.ஐ.டி.யு., துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், வார ஓய்வை பறிக்கக்கூடாது, போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்றாதே, சம்பள பறிப்பு செய்யாதே, தொழிலாளர் துறை அறிவுரையை மீறாதே, பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், எல்.பி.எப்., கிளை செயலாளர் இளங்கோவன், தொழிற்சங்க நிர்வாகிகள் அன்பழகன், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

* அரவக்குறிச்சியில், அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட கிளை முன், தொழிலாளர்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச., தலைவர் செல்வராஜ், சி.ஐ.டி.யு., தலைவர் சிவக்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X