போதையில் கார் கண்ணாடி உடைப்பு: நான்கு பேர் மீது வழக்குப்பதிவு | கரூர் செய்திகள் | Dinamalar
போதையில் கார் கண்ணாடி உடைப்பு: நான்கு பேர் மீது வழக்குப்பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:30

கரூர்: கரூர் அருகே குடிபோதையில் கார் கண்ணாடியை உடைத்த, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை பாகநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், 24; இவர் கடந்த, 18 ல் இரவு, பெரியகோதூர் பகுதியில் இண்டிகா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், 24, வல்லரசு, அப்பாஸ் மற்றும் அடையாளம் தெரியாத நபர் உள்பட, நான்கு பேர் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். இதனால், வழிவிடும்படி ஆனந்த் கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த விக்னேஷ் உள்பட, நான்கு பேர் சேர்ந்து ஆனந்தை அடித்து உதைத்து, கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதுகுறித்து, ஆனந்த் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் விக்னேசை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X