வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு | கரூர் செய்திகள் | Dinamalar
வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:30

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பள்ளபட்டியை அடுத்துள்ள இனுங்கனூர், இச்சிப்பட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 56, இவர், 25 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு சென்றுள்ளார். இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வேலன், 60, என்பவர் இனுங்கனூர் வி.ஏ.ஓ. ராஜேஸ்வரியிடம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அருகில் கிடந்த பையில் சிறிய டைரியில் நாச்சிமுத்துவின் தந்தை கருப்பண கவுண்டர், இச்சிப்பட்டியார் தோட்டம், இனுங்கனூர் என்று குறிப்பு எழுதி வைத்திருந்ததை அறிந்தனர். மேலும் விசாரணை அடிப்படையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் காணாமல் போன நாச்சிமுத்து தான் என முடிவு செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X