மணல் கடத்தல்: இருவர் மீது வழக்கு | கரூர் செய்திகள் | Dinamalar
மணல் கடத்தல்: இருவர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:32

குளித்தலை: குமாரமங்கலத்தில் திருட்டுத்தனமாக, 185 மணல் மூட்டைகளை பதுக்கி வைத்ததாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குளித்தலை அடுத்த, குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மோனிஷ், சங்கர் மகன் அஜித்குமார். இருவரும் டி.வி.எஸ். ஸ்கூட்டி மொபட்டில், சிறுக சிறுக சேர்த்து, 185 மணல் மூட்டைகளை திருட்டுத்தனமாக கடத்திச் சென்று குவித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக, தகவல் அறித்து வி.ஏ.ஓ., அழகர் குமாரமங்கலம் திடக்கழிவு மேலாண்மை அருகில் சென்றார். அப்போது இருவரும் மணல் மூட்டையை போட்டு விட்டு தப்பினர். வி.ஏ.ஓ., அழகர், 43, கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிஷ், அஜித்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X