ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிழற்கூடம் அமைக்க வேண்டும் | கரூர் செய்திகள் | Dinamalar
ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிழற்கூடம் அமைக்க வேண்டும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:34

கரூர்: கரூர் அருகே, ஆரம்ப சுகாதார நிலையம் முன், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், கருப்பம்பாளையம் பஞ்சாயத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில், அப்பிபாளையம், செட்டிபாளையம், சுக்காலியூர் மற்றும் கருப்பம்பாளையம் பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிழற்கூடம் இல்லை. இதனால், பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் போது, கொளுத்தும் வெயில் மற்றும் மழையில் திறந்த வெளியில் காத்திருக்கின்றனர். எனவே, கருப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன், உடனடியாக நிழற்கூடம் அமைக்க வேண்டியது அவசியம்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X