கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்: நாமக்கல் கண்காணிப்பு அலுவலர் வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:35

நாமக்கல்: கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நடந்தது. எஸ்.பி., சக்தி கணேசன் முன்னிலை வகித்தார்.


கலெக்டர் மெகராஜ் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 2020 முதல், நேற்று முன்தினம் வரை, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகள், மூன்று லட்சத்து, 97 ஆயிரத்து, 814 பேருக்கு மேற்கொண்டதன் மூலம், 13 ஆயிரத்து, 344 பேருக்கு, கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. 12 ஆயிரத்து, 429 பேர் குணமடைந்துள்ளனர். முன்களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறையினர் மற்றும், 45 வயதுக்கு மேற்பட்டோர் என, மொத்தம், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 139 பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 110, மாவட்டத்தில் உள்ள, எட்டு அரசு மருத்துவமனைகளில், 246, தனியார் மருத்துவமனைகளில், 319, கல்லூரிகள் மற்றும் வட்டார சுகாதார மையங்களில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில், 560 என, மொத்தம், 1,235 படுக்கை வசதிகள் உள்ளன. நாமக்கல் நகராட்சியில், ஆறு, திருச்செங்கோட்டில், ஒன்று, குமாரபாளையத்தில், நான்கு, பேரூராட்சி பகுதிகளில், இரண்டு, ஊராட்சி பகுதிகளில், 14 என, மூன்று பேருக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் கொண்ட, மொத்தம், 27 பகுதிகளில், கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நோய்த்தொற்று தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, 11 ஆயிரத்து, 423 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, நான்கு லட்சத்து, 84 ஆயிரத்து, 213 பேர் பங்கேற்றதில், 3,246 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த, 1 முதல், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, 22 லட்சத்து, 12 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை (கூடுதல் பொறுப்பு) மதுமதி தலைமை வகித்து பேசியதாவது: ஒவ்வொரு அலுவலர்களும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில், தங்களுக்கான கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ள வேண்டும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும், மீண்டும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, நோய்த்தொற்று சங்கிலியை உடைப்பதன் மூலம், கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக விரைந்து உருவாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, ராசிபுரம் எஸ்.ஆர்.வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், ராசிபுரம் அரசு மருத்துவமனையில், தடுப்பூசி போடும் பணி. ராசிபுரம் நகராட்சி, 24வது வார்டு, பழனிநகர் பகுதியில், நடந்த காய்ச்சல் முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, பிள்ளாநல்லூர் வட்டார சுகாதார நிலையம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும், பார்வையிட்டார்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X