காய்கறி வியாபாரிகளுக்கு ஊரடங்கில் தளர்வு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை | நாமக்கல் செய்திகள் | Dinamalar
காய்கறி வியாபாரிகளுக்கு ஊரடங்கில் தளர்வு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:36

நாமக்கல்: 'காய்கறி வியாபாரிகளுக்கு, இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், நேற்று முதல், இரவு, 10:00 முதல், அதிகாலை, 4:00 மணி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், போக்குவரத்து இயங்கவும், மக்கள் நடமாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால், உழவர் சந்தைக்கு, காய்கறி கொண்டுவரும் கிராமப்புற விவசாயிகள் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு, காய்கறி வினியோகம் செய்யும் மொத்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். அதிகாலை, 4:00 மணிக்கு மேல், காய்கறிகளை வினியோகம் செய்வதன் மூலம், காய்கறி கொள்முதல் செய்வதில், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாவர். அவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, காய்கறி வியாபாரிகளுக்கு, இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X