ஆகாயத்தாமரையால் மின் உற்பத்தி பாதிக்க வாய்ப்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
ஆகாயத்தாமரையால் மின் உற்பத்தி பாதிக்க வாய்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
16:36

பள்ளிபாளையம்: சமயசங்கிலி தடுப்பணையில் ஆகாயத்தாமரை அதிகளவு படர்ந்துள்ளதால், மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, ஒன்பது மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கி, மின் உற்பத்தி நடந்து வருகிறது. இவ்வாறு தேக்கி வைக்கபடும்போது, 10 கி.மீ., தூரத்திற்கு தண்ணீர் தேங்கியிருக்கும். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போதும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போதும் மின் உற்பத்தி நடக்கும். தற்போது தடுப்பணையின் முழுகொள்ளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தாமரை அதிகளவு படர்ந்து, மின் உற்பத்திக்கு தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதை வழியிலும் உள்ளதால், மின் உற்பத்திக்கு தடை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆகாயத் தாமரைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X